Follow on


Old Thamizh film songs

mela thaalam ketkum kaalam
Singers: T.M.Soundararajan, P.Susheela
Music: MSV
Lyrics: Vaali
Film: Sivagamiyin Selvan (1974)

பாடல்

சௌ: மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி....

மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி....

சு: விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

சௌ: மனம் இனிக்க இனிக்க

சு: வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

சௌ: வருவாய் நீ கல்யாண பெண்ணாகி .....

சௌ: பூங்கொடி தன்னை மெல்ல தொட்டு
முல்லை பூ போல அள்ளி கொள்ளவா

சு: மாங்கனி கன்னம் வெள்ளி தட்டு
தந்து பந்தாட்டம் துள்ளி வரவா

சௌ: பூங்கொடி தன்னை மெல்ல தொட்டு
முல்லை பூ போல அள்ளி கொள்ளவா

சு: மாங்கனி கன்னம் வெள்ளி தட்டு
தந்து பந்தாட்டம் துள்ளி வரவா

சௌ: மான் குட்டி கண்ணுக்கு
மை போட்ட பெண்ணுக்கு
பக்கம் நின்னா சொக்கும் எந்தன் கண்ணம்மா

சு: வாடாத மேனியில் ராஜாங்கம் போலவே
நீயாள கையோடு வந்தேனய்யா
சசச சம்ச சம்சம்
யயய யலல லல
சசச சம்ச சம்சம்
யயய யலல லல

சௌ: மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி....

சு: விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

சௌ: மனம் இனிக்க இனிக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி.....

சு: இதழ் சிவக்க சிவக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி.....

சு:  ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆட சொல்லவா  அஆ

சௌ: ஆயிரம் முத்து மஞ்சமிட்டு
உன்னை வாடாமல் வாட சொல்லவா  அஆ

சு:  ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆட சொல்லவா  அஆ

சௌ: ஆயிரம் முத்து மஞ்சமிட்டு
உன்னை வாடாமல் வாட சொல்லவா  அஆ

சு:  நீ தொட்ட கொட்டமும்
நான் கொண்ட வெட்கமும்
கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா

சௌ: ஆனந்த தொல்லையை
அழகான பிள்ளையாய்
தாலாட்டு பாடி நான் கொண்டாடவா

சு: சசச சம்ச சம்சம்
யயய யலல லல...

சௌ: மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி....

சு: அ.. விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

சௌ: மனம் இனிக்க இனிக்க

சு: வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

சௌ: வருவாய் நீ கல்யாண பெண்ணாகி.....