Follow on

ponaal pogattum poda - Paalum Pazhamum song
Old Thamizh film songs

ponaal pogattum poda

Singer: TMS (Sivaji Ganesan)
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Paalum Pazhamum (1961)
Cast: Sivaji Ganesan, Saroja Devi, Sowcar Janaki


பாடல்
ஒஹொஹோ ஹோஹொஹொ .......

போனால் போகட்டும் போடா...
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா...
ஒஹொஹோ ஹோஹொஹொ .......

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.....

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உறவை சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குறலாலே கிடைக்காது
இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது
அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா...

ஒஹொஹோ ஹோஹொஹொ .......

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தை கண்டேனா
இருந்தால் அவளை தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா...
ஒஹொஹோ ஹோஹொஹொ ......