Follow on


Old Thamizh film songs

ilakanam maarudho - Nizhal Nijamagiradhu (1978)
ilakkanam maarudho

Singers: S.P.Balasubrahmanyam, Vani Jairam
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Nizhal Nijamagiradhu (1978)


பாடல்

பா: இலக்கணம் மாறுதோ. .ஓ ஓ...
இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது எந்த வேதம்
இது என்ன பாடம்
இதுவரை நடித்தது அது எந்த வேதம்
இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ. .ஓ ஓ......

கல்லான முல்லை
இன்றென்ன வாசம்
காற்றான ராகம்
ஏன் இந்த கானம்
வெண் மேகம் அன்று
கார் மேகம் இன்று
யார் சொல்லி தந்தார்
மழைக் காலம் என்று
மன்மதன் என்பவன்
கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ. .ஓ ஓ.ஓ.....

வா: என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ
கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ
கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே
திரைப் போட்டு வைத்தேன்
திரைப் போட்ட போதும்
அணை போட்டதில்லை
மறைத்திடும் திரை தனை
விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ......

பா: தள்ளாடும் பிள்ளை
உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட
ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம்
உனக்காக பாடும்
பாடாமல் போனால்
எது தெய்வம் ஆகும்
மறுபடி பிறக்கும்
உனக்கொரு பாதை
உரைப்பது கீதை.....

வா: மணி ஓசை என்ன
இடி ஓசை என்ன
எது வந்த போதும்
நீ கேட்டதில்லை
நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து
எனை காக்க கண்டேன்
நீ எது நான் எது
ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ ஆ

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்

Lyrics

SPB: ilakkaNam maarudho..o .. o...
ilakkaNam maarudho
ilakkiyam aanadho
idhuvarai nadiththadhu adhu endha vedham
idhu enna paadam
idhuvarai nadiththadhu adhu endha vedham
idhu enna paadam
ilakkaNam maarudho..o .. o...

kallaana mullai
indrenna vaasam
kaatraana raagam
En indha gaanam
veN megam andru
kaar megam indru
yaar solli thandhaar
mazhai kaalam endru
manmadhan enbavan
kaN thirandhaano
peNmai thandhaano
ilakkaNam maarudho..o ..o .. o...

VJ: en vaazhkai nadhiyil
karai ondru kaNden
un nenjil Eno
karai ondru kaNden
en vaazhkai nadhiyil
karai ondru kaNden
un nenjil Eno
karai ondru kaNden
puriyaadhadhaale
thirai pottu vaithen
thirai potta podhum
aNai pOttadhillai
maraithidum thirai thanai
vilakki vaipaayo
viLakki vaipaayo...

SPB: thaLLaadum piLLai
uLLamum veLLai
thaalaatu paada
aadhaaram illai
dheivangaL ellaam
unakaaga paadum
paadaamal ponaal
edhu dheivam aagum
marupadi pirakkum
unakkoru paadhai
uraippadhu geethai...

VJ: maNi osai enna
idi osai enna
edhu vandha podhum
nee kEttadhillai
nizhalaaga vandhu
aruL seyyum dheivam
nijamaaga vandhu
enai kaaka kaNden
nee edhu naan edhu
En indha sondham
poorva jenma bandham
aa a aa aa a aa aa a aa

ilakkaNam maarudho
ilakkiyam aanadho
idhuvarai nadithadhu
adhu enna vEdam
idhu enna paadam