Follow on

Old Thamizh film songs
 
vasanthathil or naal
Singer:  P.Susheela
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Moondru Dheivangal (1971)

பாடல்

வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ....

வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ.....

மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை
தேவர்கள் யாவரும் திருமண மேடை
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி....
திருமால் ப்ரம்மா சிவன் எனும் மூவர்
திருமால் ப்ரம்மா சிவன் எனும் மூவர்
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ.....

பொன் வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
பொன் வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே...
பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீருடன் வந்து சீதனம் தந்து
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ.....

வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ.....

LYRICS

                        .